திருமா: கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் மாநில அரசு செயல்பட வேண்டும்

திருமா: கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் மாநில அரசு செயல்பட வேண்டும்

1 mins read
c219ff32-f70f-47b0-8e51-edf289e019ba
-

சென்னை: தமிழக அரசை ஏதோ ஒரு வகையில் மத்திய அரசு நெருக்குகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய அரசின் கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் தமிழக அரசு சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

"சென்னையில் வரும் 21ஆம் தேதி மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் வகையில் முற் போக்கு மாணவர் கழகம் சார் பில் தேசிய மாநாடு நடைபெறு கிறது. இதில் ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைக்காகப் போராடிய மாணவர் ரோகித் வெமுலாவின் நினைவைப் போற்றும் வகையில் அவரது திருவுருவப் படம் திறந்து வைக்கப்படும்.