திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின்

திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்றுக் காலை நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலினுக்குச் செயல் தலைவராகக் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது. இதற்காகக் கட்சியின் 18வது விதியில் மாற்றம் செய்யப்பட்டது. செயல் தலைவராக ஸ்டாலினை நியமிக்கும் தீர்மானத்தை திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் முன்மொழிந்தார். முதன் மைச் செயலாளர் துரைமுருகன் வழி மொழிந்தார். இதையடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கடந்த 48 ஆண்டுகளில் திமுக தலைவர் கருணாநிதி இல்லாமல் அக்கட் சியின் பொதுக்குழு கூடியது இதுவே முதன்முறை. உடல்நலப் பிரச்சினையால் அண்மையில் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட அவர், பூரண நலமடைந்த பின் வீடு திரும்பினார். ஆயினும், அவ ருக்கு ஓய்வு தேவைப்படுவதால் நேற்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. செயல் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு ஏற்புரை ஆற்றிய ஸ்டாலின், "செயல் தலைவராக என்னை நியமித்தது திடீரென எடுத்த முடிவு இல்லை. ஓய்வுக்கே ஓய்வு தந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இப்போது ஓய்வு தேவைப்படுகிறது. அவருக்கு ஓய்வு தரவேண்டும் என்பதால் பொதுச் செயலாளர், முதன்மைச் செய லாளர், கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து பேசி, செயல் தலைவர் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!