சசிகலா: சூழ்ச்சிகளை ஒன்று சேர்ந்து முறியடிப்போம்

சென்னை: ஜெயலலிதாவின் மறைவைப் பற்றி விமர்சனங்கள் செய்து அரசியல் ஆதாயம் தேட முயல்வோரின் சூழ்ச்சியை, சூட்சுமத்தை ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வலியுறுத்தினார். எம்ஜிஆர், அம்மாவின் பிறந்தநாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் தெருமுனை கூட்டங்களை நடத்தவேண்டும். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும் என்றார் அவர். விளையாட்டுப் போட்டிகளை யும், பேச்சுப் போட்டிகளையும் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெறுவோருக்குச் பரிச ளிக்கும் நிகழ்ச்சியில் தானே கலந்துகொண்டு பரிசுகளை வழங்கப்போவதாக அவர் அறி வித்தார்.

கட்சியைக் கட்டுகோப் புடன் கொண்டுசெல்ல அனை வரும் சிறப்புடன் செயல்பட வேண்டும் என்று சசிகலா மேலும் தெரிவித்தார். முதல்வர் தலைமையில் 10 நிமிட அமைச்சரவைக் கூட்டம் நேற்றுக் காலை தலைமைச்செய லகத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து முதல் வர், அமைச்சர்கள் எல்லாரும் நேராக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்துக்குச் சென்றனர். அங்கு அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுடன் கட்சிப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கட்சி நிர்வாகி களிடம் ஆற்றிய உரையில் இவ் வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர்கள் உடன் இருக்க, வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!