ஒரே நேரத்தில் 17 இடங்களில் வருமான வரி சோதனை

சென்னை: நாடு முழுவதும் 70 இடங்களில் ஒரே நேரத்தில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடந்தது. தமிழகத்தில் 17 இடங் களில் வருமான வரித்துறை அதி காரிகள் அதிரடி வேட்டையில் ஈடு பட்டனர். கறுப்புப் பணத்தை ஒழிக்கவும் கள்ளப் பணத்தைக் கட்டுப்படுத்த வும் மத்திய அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளின் உச்ச மாக 500, 1000 ரூபாய் நோட்டு களுக்கு நவம்பர் மாதம் 8ஆம் தேதி தடை விதிக்கப்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொணர நட வடிக்கைகளை வருமான வரித் துறையினர் முடுக்கிவிட்டனர். தொழில் அதிபர்கள், பெரும் பணக்காரர்கள் பதுக்கிவைத்து உள்ள பணத்தைப் பறிமுதல் செய்ய தொடர்ச்சியாக சோதனை களும் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னையைச் சேர்ந்த தொழி ல திபர் சேகர் ரெட்டி கட்டடங்களில் கடந்த 8ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.131 கோடி பணமும் 170 கிலோ தங்க நகை களும் சிக்கின. இதில் 34 கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளாக இருந்தன. இதனைத் தொடர்ந்து சேகர் ரெட்டியும் அவரது கூட்டாளி கள் நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அவரது மகன் விவேக், உறவினர்கள் வீடுகளிலும் சோதனைகள் நடந்தன. வருமான வரித்துறை அதிகாரி கள் நேற்று மீண்டும் சோதனை யைத் தொடங்கினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!