2,000 ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் இல்லாததால் அதிர்ச்சி

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வழங்கப்பட்ட புதிய 2,000 ரூபாய் நோட்டுகளில் இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி படம் இல்லாததைக் கண்டு (படம்) வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம், சேவோப்பூரில் உள்ள எஸ்பிஐ வங்கியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. பிச்சுகாவ்டி எனும் சிற்றூரைச் சேர்ந்த கிருஷ்ண மீனா என்ற விவசாயி அந்த வங்கியிலிருந்து பணம் எடுத்துள்ளார். அதில் காந்தி படம் இடம்பெறாததை அவர் முதலில் பார்க்கவில்லை. அந்தப் பணத்துடன் சந்தைக் குச் சென்ற பின்னரே அவர் அதை அறிய நேர்ந்தது. அவரிடம் அதைச் சுட்டிக்காட்டிய இன் னொரு விவசாயியிடமும் அதே போல இரண்டு 2,000 நோட்டுகள் இருந்தன. அவை கள்ள நோட்டுகளாக இருக்குமோ என ஐயம் தோன்ற, உடனடியாக அவர்கள் சம்பந்தப் பட்ட வங்கிக்குச் சென்று விஷ யத்தைக் கூறியதும் வங்கி அதி காரிகள் அந்த நோட்டுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். "அந்த நோட்டுகள் போலி யானவை அல்ல.

அச்சுப் பிழை நிகழ்ந்திருக்கலாம்," என்றார் சேவோப்பூர் மாவட்ட எஸ்பிஐ மேலாளர் ஆகாஷ் ஸ்ரீவாஸ்தவ். தாவூத் இப்ராகிமின் 15,000 கோடி ரூபாய் சொத்துகள் பறிமுதல் இந்தியாவால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் முக்கியமான வனான நிழலுலகத் தலைவன் தாவூத் இப்ராகிமுக்குச் சொந்த மான ரூ.15,000 கோடி (S$3.17 பில்லியன்) மதிப்புள்ள சொத்து களை ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ) அரசாங்கம் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அவற்றை மேற்கோள் காட்டி, இந்த நடவடிக்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசதந்திர முயற்சிகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று அவரது பாரதிய ஜனதா கட்சி புகழாரம் சூட்டியுள்ளது. இந்திய அரசாங்கம் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் தாவூத்தின் சொத்துப் பறிமுதல் நடவடிக்கை இடம்பெற்றதாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக குறிப்பிட்டுள்ளது.

"மோடியின் மிகப் பெரிய அரசதந்திர வெற்றி: இந்தியா தேடி வரும் குற்றவாளிகளில் முக்கிய மானவனான தாவூத் இப்ராகிமின் ரூ.15,000 கோடி சொத்துகளை யுஏஇ பறிமுதல் செய்தது," என்று பாஜக 'டுவீட்' செய்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் மோடி யுஏஇக்குப் பயணம் செய்த போது தாவூத்தின் சொத்துப் பட்டியலை அந்நாட்டு அரசாங்கத் திடம் அளித்ததாக பாஜக தெரிவித்தது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் 59 வயதான தாவூத்தைப் பிடிக்க இந்தியா கடந்த இருபது ஆண்டு களுக்கும் மேலாக முயன்று வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!