தாவூத் இப்ராகிமின் 15,000 கோடி ரூபாய் சொத்துகள் பறிமுதல்

இந்தியாவால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் முக்கியமானவனான நிழலுலகத் தலைவன் தாவூத் இப்ராகிமுக்குச் சொந்த மான ரூ.15,000 கோடி (S$3.17 பில்லியன்) மதிப்புள்ள சொத்து களை ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ) அரசாங்கம் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அவற்றை மேற்கோள் காட்டி, இந்த நடவடிக்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசதந்திர முயற்சிகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று அவரது பாரதிய ஜனதா கட்சி புகழாரம் சூட்டியுள்ளது.

இந்திய அரசாங்கம் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் தாவூத்தின் சொத்துப் பறிமுதல் நடவடிக்கை இடம்பெற்றதாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக குறிப்பிட்டுள்ளது. "மோடியின் மிகப் பெரிய அரசதந்திர வெற்றி: இந்தியா தேடி வரும் குற்றவாளிகளில் முக்கிய மானவனான தாவூத் இப்ராகிமின் ரூ.15,000 கோடி சொத்துகளை யுஏஇ பறிமுதல் செய்தது," என்று பாஜக 'டுவீட்' செய்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் மோடி யுஏஇக்குப் பயணம் செய்த போது தாவூத்தின் சொத்துப் பட்டியலை அந்நாட்டு அரசாங்கத் திடம் அளித்ததாக பாஜக தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!