வைகோ: தமிழீழ போராட்டம் தொடரும்

சென்னை: தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான விவ ரங்களுடன் உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய 'தம்பி ஜெயத்துக்கு...' என்ற நூல் வெளி யீட்டு விழா சென்னை மேற்கு மாம்பலத்தில் நடந்தது. விழா வுக்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நூலை வெளியிட, 'புதிய பார்வை' ஆசிரியர் ம.நடராஜன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் வைகோ பேசும் போது,"எனது ஒரே கனவு தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பது மட்டுமே. தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழீழத்துக்குக் குரல் கொடுத்த ஒரே தலைவர் சி.பா. ஆதித்தனார்.

"தமிழீழத்தை அடைவதற்கான போர் முடிந்துவிட்டது என்று யாரும் மனப்பால் குடிக்கவேண் டாம். அந்தப் போர் தொடரும். தமிழீழத்தை அடைவதற்கு எதிராகத் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தமிழர் களின் வரலாற்றில் மன்னிக்கப் படமாட்டார்கள். இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பந்த மான ஆதாரங்களைத் திரட்டி ஜெனீவாவுக்கு அனுப்பவேண்டும். நம் வாழ்நாளில் சுதந்திர தமிழீழம் அமைவதைக் கண்டிப்பாகப் பார்ப்போம்." என்றார் வைகோ.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!