ஆளுநரை மாற்றுமாறு புதுவை போர்க்கொடி

புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி அரசு அதிகாரிகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்து வது தொடர்பாக பிறப்பித்த உத் தரவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கியதால் இருவ ருக்குமிடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது. புதுவை மக் களின் பிரச்சினைகள், அரசுநலத் தி ட்டங்களை விரைவாகச் செயல் படுத்தும் நோக்கில் அனைத்துத் துறை அதிகாரிகள் இடம்பெற்றி ருந்த 'வாட்ஸ்அப்' குழுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நிர்வகித்து வந்தார்.

அந்த 'வாட்ஸ் அப்' குழுவில் உள்ள கூட்டுறவு சங்கப்பதிவாள ர் சிவகுமார் என்பவர் ஆபாசப்படம் ஒன்றைப் பதிவிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, குழுவில் இருந்து அந்த அதி காரியை நீக்க கி ரண் பேடி உத் தரவிட்டார். இந்நிலையில், சமூக வலைத் தளங்களான வாட்ஸ்அப், டுவிட்டர், ஃபேஸ்புக் குழுக்களிலி ருந்து வெளியேறுமாறு ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியாளர் நலத்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் (இடது) முதல்வர் நாராயணசாமிக்கும் இடையில் நீடித்து வந்த பனிப்போர் இப்போது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!