நடுவானில் கோளாறு: பெங்களூரு - துபாய் பயணிகள் தப்பினர்

புதுடெல்லி: பெங்களூருவில் இருந்து தனியார் போயிங் விமானம் துபாய்க்கு நேற்றுக் காலை புறப்பட்டது. அதில் விமான பணியாளர்கள் உள்பட 176 பயணிகள் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்துகொண்டு இருந்தபோது திடீர் என்று விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. தரை இறங்கும் போது விமானத்தின் சக்கரங்களை கீழே இயங்கச் செய்யும் ஹைடிராலிக் சிஸ்டம் சரிவர செயல்படா ததை விமானி கண்டுபிடித்தார். அப்போது விமானம் டெல்லி மீது பறந்து கொண்டு இருந்தது. உடனே விமானம் அவசரமாக டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் காலை 8.45 மணிக்கு தரை இறங்கியது. முன்னதாக டெல்லியில் பயணிகளை பத்திரமாக மீட்கவும் அவசர உதவிக்காகவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. விமானம் பத்திர மாக தரை இறங்கியதால் 176 பயணிகளுடன் விமானம் விபத்தில் இருந்து தப்பியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!