ஒழிக்கப்பட்ட நோட்டுகளை உயிர்ப்பிக்க இறுதிக்கட்ட முயற்சி

ஒழிக்கப்பட்ட நோட்டுகளை உயிர்ப்பிக்க இறுதிக்கட்ட முயற்சி

1 mins read
97ed7f34-0989-48c2-8a5b-1c138085e9fb
-

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள டிசம்பர் 30 வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தபோதிலும் இன்னும் சிலர் அந்த நோட்டுகளை வைத்துள்ளனர். வங்கிகள் அவர்களுக்குக் கதவடைத்துவிட்டாலும் மார்ச் இறுதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர ரிசர்வ் வங்கியின் கிளைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள அவ்வங்கிக் கிளையின் வாசலில் ஏராளமானோர் கூடியிருப்பதைப் படத்தில் காணலாம். மார்ச் மாதத்திற்குப் பிறகு இந்த நோட்டுகளை உயிர்ப்பிக்க வழியே இல்லை என்பதால் பழைய நோட்டுகளைத் தேடிப்பிடித்து மாற்றி வருகின்றனர். படம்: ஏஎஃப்பி