அடிமைபோல் காலில் விழவேண்டாம்: திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

அடிமைபோல் காலில் விழவேண்டாம்: திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

1 mins read
c05e6a8a-8f83-4198-a2b1-c0c16a92faff
-
Google News Preferred Icon

தம்மைச் சந்திக்க வரும் திமுக தொண்டர்கள் யாரும் தமது காலில் விழுந்து வணங்கவேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். "வளைந்து குனிந்து தவழ்ந்து தரையில் உருண்டு கால்நோக்கி கும்பிடு போடுபவர்களால் தமிழகம் பாழ்பட்டுக் கிடக்கிறது. நமக்கு அந்தப் பள்ளமான பாதை வேண்டாம். நாம் தலைநிமிர்வோம். தமிழகத்தை நிமிர்த்துவோம்!" என்று திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். "மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வு இருக்கக்கூடாது என சமத்துவ நிலை காண உரிமைப் போராட்டம் நடத்திய திராவிட இயக்கத்தின் அரசியல் அமைப்பாக திமுக செயல்பட்டு வருகிறது.

யார் காலிலும் விழவேண்டிய அடிமை நிலை எந்த மனிதருக்கும் எப் போதும் ஏற்படக்கூடாது என்பதை வலியறுத்தி, வெற்றி கண்ட இயக்கம் இது," என்றார் அவர். நேரில் சந்திக்க வரும் கழகத் தினர் சிலர் ஆர்வ மிகுதியால் தன் காலில் விழுந்து வணங்க முயல்வது தனக்கு மனதளவில் பெரும் நெருக்கடியை உண்டாக்கு கிறது என்றும் தொண்டர்களின் அன்பான வாழ்த்துகள் மட்டும் போதும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். அப்படித் தன் காலில் விழ முயலும் தோழர்களை உடனடி யாகத் தடுத்துத் தூக்குவதுடன் சில வேளைகளில் பாசத்தோடு கடிந்துகொள்வதும் உண்டு என்று அவர் சொன்னார்.