சசிகலாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த வெளிநாட்டுத் தூதர்கள்

சென்னை: அதிமுக பொதுச்செயலராகப் பொறுப்பேற்றுள்ள சசிகலாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய குடியரசுக் கட்சியின் தேசிய தலைவர் ராம்தாஸ் அத்வாலே நேற்று முன்தினம் அவரை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் தென்னிந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் செர்ஜே எல்.கோடவ், சென்னை ரஷ்ய தூதரக அதிகாரி எவ்கேனி கிராவ் சென்கோ, ரஷ்ய தூதரக கலாசார பிரிவின் தகவல் ஆலோசகரும் இந்திய ரஷ்ய வர்த்தக சபையின் பொதுச்செயலாளருமான தங்கப்பன், மாசிடோனியாவுக்கான இந்திய தூதரக அதிகாரி அரவிந்த் குப்தா, செனகலுக்கான இந்திய தூதரக அதிகாரி அசோக் தக்கர் ஆகியோர் தனித்தனியே சசிகலாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக அதிமுக தலைமைக்கழக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!