மதுரை விமான நிலையத்துக்கு மிரட்டல்

மதுரை: கடிதம் மூலம் மீண்டும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது. இம்மிரட்டல் குறித்து போலிசார் விசாரிக்கின்றனர். கடந்த 4ஆம் தேதி மதுரை விமான நிலைய இயக்குநர் பெயருக்கு தஞ்சையில் இருந்து வந்த கடிதத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடரவில்லை எனில் விமான நிலையம் குண்டு வைத்து தகர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏற்கெனவே கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி இதேபோன்ற மிரட்டல் கடிதம் வந்திருந்தது. எனினும் இம்மிரட்டல்களால் விமான நிலையப் பணிகள் பாதிக்கப்படவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!