விரைவில் முதல்வர் ஆவார் சசிகலா: அமைச்சர் கருப்பண்ணன்

சென்னை: காலஞ்சென்ற முதல் வர் ஜெயலலிதாவின் வழியில் அதிமுகவை அதன் பொதுச் செயலர் சசிகலா வழிநடத்திச் செல்வதாக அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளார். ஈரோட்டில் இலவச வேட்டி, சேலை வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், மிக விரைவில் தமிழக முதல் வராகவும் சசிகலா பதவியேற்பார் என நம்பிக்கை தெரிவித்தார். "காலஞ்சென்ற ஜெயலலிதா செய்யாமல் விட்டுச்சென்ற பணிகளை எல்லாம் தற்போது முதல்வராக உள்ள பன்னீர் செல்வமும், அவரைத் தொடர்ந்து விரைவில் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள சசிகலாவும் செய்து முடிப்பார்கள். "அதிமுகவுக்குத் தமிழக மக்க ளின் நலனே முக்கியம். சசிகலா நல்லாட்சி தருவார்," என்றார் அமைச்சர் கருப்பண்ணன். முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பன்னீர்செல் வத்துக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சசிகலா விரைவில் முதல்வர் ஆவார் என அமைச்சர் கருப்பண்ணன் பகிரங் கமாகப் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!