வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள்

பெங்களூரு: நாட்டின் வளர்ச்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் முக்கிய பங்காற்றி இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வெளிநாடுவாழ் இந்தியர்களுக் காக பெங்களுருவில் 14வது ஆண்டாக நடத்தப்படும் மூன்று நாள் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு கூறினார். ஆண்டுக்கு சுமார் 69 பில்லியன் டாலர் மதிப்பிலான பணம் வெளி நாடுவாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறது. வெளிநாடுவாழ் இந்தியர்களின் பாதுகாப்பில் இந்திய அரசு முன் னுரிமை அளிப்பதாகவும் அவர்களது பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க வெளியுறவுத் துறை அமைச்சு மூலம் இந்தியத் தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பிர தமர் மாநாட்டில் தெரிவித்தார். சுமார் 30 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகச் சொன்ன திரு மோடி வெளிநாடு களில் குடியுரிமை பெற்றிருக்கும் இந்தியர்கள் தாங்கள் இந்திய வம்சாவளியினர் என்பதைக் குறிப்பிடும் 'பிஐஓ'வுக்குப் பதிலாக 'ஓசிஐ' பெறுவதற்கான கால அவகாசம் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப் பதாகக் கூறினார்.

பெங்களூருவில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக நடத்தப்படும் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட போர்ச்சுக்கீசிய பிரதமர் அன்டோனியோ கோஸ்டா அந்நாட்டு பிரபல காற்பந்து விளையாட்டாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காற்பந்துச் சீருடையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பரிசாக வழங்கினார். படம்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!