ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் சேமித்தவர்களின் தகவல்கள் திரட்டல்

புதுடெல்லி: தனிநபர் சேமிப்புக் கணக்கில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து நவம்பர் மாதம் 9ஆம் தேதி வரை 2.5 லட்ச ரூபாய் அல்லது அதற்கு மேல் யாரேனும் செலுத்தியிருந்தால் அவர்களது விவரத்தை அளிக்குமாறு தபால் நிலையங்கள், வங்கிகளுக்கு நிதி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. நடப்புக் கணக்கில் அதே காலகட்டத்தில் 12.5 லட்ச ரூபாய் அல்லது அதற்கு மேல் செலுத்தியவர்களின் விவரமும் கோரப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெளியான புதிய சட்ட விதிகளின்படி இந்தத் தகவல்களை இம்மாதம் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி மத்திய அரசு கேட்டுள்ளது. திரட்டப்படும் தகவல்களிலிருந்து சென்ற நவம்பரில் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிப்பு வெளியாவதற்கு முன்பும் பின்னரும் யாரும் வரி ஏய்ப்புச் செய்திருந்தால் அதனைக் கண்டறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!