இந்தியாவிற்கு ஆதரவளிக்க பிரான்ஸ் அமைச்சர் உறுதி

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் மார்க் அய்ரால்ட், ஐநா பாதுகாப்பு மன்றத்தில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடு ஆவதற்கு பிரான்ஸ் ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் மார்க் அய்ரால்ட், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது இந்தியா-பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு, நகர மேம்பாடு, சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அத்துடன் சீர்திருத்தம் செய்யப்பட்ட, விரிவாக்கம் செய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடு ஆவதற்கு பிரான்ஸ் ஆதரவளிக்கும் என்று ஜீன் மார்க் அய்ரால்ட் தெரிவித்தார். அணுசக்தி விநியோகிப்பாளர்கள் குழுவில் இந்தியா இடம்பெறுவதற்கு பிரான்ஸ் ஆதரவளிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய ஜீன் மார்க் அய்ரால்ட், நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!