தத்தெடுக்க புதிய விதிமுறைகள் அமல்

1 mins read

புதுடெல்லி: குழந்தைகளைத் தத்து எடுப்பதற்கான புதிய விதிமுறைகள் வரும் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதரவற்ற, கைவிடப்பட்ட குழந்தைகளை மட்டுமே தத்தெடுக்கலாம் எனும் விதிமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தத்து எடுப்பதை எளிமையாக்க புதிய விதிமுறை களை மத்திய தத்தெடுப்பு ஆணையம் வகுத்துள்ளது. இப்புதிய விதிமுறைகளின்படி இனி உறவினர்களின் குழந்தைகளையும் தத்து எடுக்கலாம். மேலும் 2வது திருமணம் செய்த பெற்றோர் தங்களது முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகளைத் தத்து எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் தத்து எடுத்தவர்கள் சட்டப்படி குழந்தைக்குப் பெற்றோர் ஆக முடியும்.