புதுடெல்லி: ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரை 4,807 கோடி ரூபாய் கறுப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கறுப்புப் பணத்தில் 112 கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளாகப் பிடிபட்டுள்ளதாக டெல்லியில் வருமான வரி உயரதிகாரிகள் சிலர் கூறினர். பிடிபட்ட புதிய ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவை 2,000 ரூபாய் நோட்டுகள் என்றும் கறுப்புப் பணம் தொடர்பாக இதுவரை 5,184 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ள தாகவும் கூறப்பட்டுள்ளது. தங்க நகைகளாக 97 கோடியே 80 லட்ச ரூபாய்க்குக் கணக்கில் வராத தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.4,807 கோடி கறுப்புப்பணம் பறிமுதல்
1 mins read

