அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு

காந்திநகர்: கடந்த இரண்டரை ஆண்டுகளில், அந்நிய நேரடி முதலீடு ரூ.8,84,000 கோடியை எட்டியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். 'துடிப்பான குஜராத்' என்ற பெயரில், உலக ளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு குஜராத் மாநிலம் காந்திநகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். "'மேக் இன் இந்தியா' திட்டம், இதுவரை நாடு காணாத பெரிய திட்டமாக உருவெடுத்துள்ளது. பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகளைத் தளர்த்தி உள்ளோம். அதனால், அந்நிய நேரடி முதலீடு குவிந்து வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த முதலீடு ரூ.8,84,000 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. "கடந்த 2 நிதி ஆண்டுகளில் வந்த அந்நிய நேரடி முதலீடு, அதற்கு முந்தைய 2 நிதி ஆண்டுகளில் வந்த முதலீட்டை விட 66 விழுக்காடு அதிகம் ஆகும்," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!