நிதிநிலை அறிக்கை வெளியிடாத தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை

நிதிநிலை அறிக்கை வெளியிடாத தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை

1 mins read

புதுடெல்லி: ஆண்டு இறுதி நிதிநிலை அறிக்கையை வெளியிடாத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நிதி பயன்பாட்டைக் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிமன்றம், "தங்களது இருப்புச்சீட்டுகளை வெளியிடாத அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய தொண்டு நிறுவனங்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும். சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் இதில் அடங்கும்," எனத் தெளிவுபடுத்தியது.