ஜல்லிக்கட்டு: தமிழகம் எங்கும் போராட்டம் தீவிரம்

பொங்கல் கொண்டாட்டத்தின் போது காளை மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த உச்ச நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த இடைக்கால அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்துவிட்டது. அத்து டன் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து போராட்டங் கள் மேலும் மாநிலமெங்கும் பரவ லாகி வருகின்றன. அரசியல் கட்சிகளுடன் கல்லூரி மாணவ, மாணவியரும் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

சென்னை, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு களைப் புறக்கணித்து போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் நேற்று மூன்றாவது நாளாக ஆயிரக்கணக்கான மாண வர்கள் கறுப்புத் துணி கட்டிக் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என முழக்கமிட்டு வருகின்றனர். அவர்கள் நகரின் பல முக்கிய பகுதிகளில் பேரணி நடத்தினர். திரைத் துறையினரும் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவான போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான கலைஞர்கள் தங்களது ஆதரவை பதிவு செய்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு நேற்று மாலை தனது வீட்டின் முன்பாக கைகட்டி கறுப்புச் சட்டை அணிந்து மௌனப் போராட்டம் நடத்தினார்.

அவரின் அழைப்பை ஏற்று சென்னை முதல் தூத்துக்குடி, கன்னியாகுமரி வரை ஆங்காங்கு மக்கள் பத்து நிமிட நேரம் ஏராள மான மக்கள் வீதியில் திரண்டு மௌனப் போராட்டம் நடத்தினர். பெங்களூர், புனே, மும்பை, ஹைதராபாத், டெல்லி என தமிழர் கள் பெருவாரியாக வசிக்கும் பல நகரங்களிலும் அலுவலகங்களில் இதுபோன்ற போராட்டங்கள் நடத் தப்பட்டன. கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று ஜல்லிக் கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நாமக்கல்லில் இன்று பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியி னர் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி உண்ணா விரதம் இருக்கின்றனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுச்சேரி கடற்கரைச் சாலை யில் மனிதச்சங்கிலி அமைத்துப் போராடிய இளையர்கள், ஜல்லிக் கட்டு விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக குற்றம்சாட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகை யிட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!