சிவகங்கை போலிசார் மீது அரிவாளால் தாக்கு; பிரபல ரவுடி சுட்டுக்கொலை

சிவகங்கை: பிரபல ரவுடி கார்த்திகைசாமி காவல்துறை யினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 28 வயதான அவர் தமிழகம் முழுவதும் 34 வழக்குகளில் தேடப்பட்டு வந்ததாக போலிசார் தெரிவித்தனர். மதுரை விமான நிலையம் அருகே கூடக்கோவில் என்ற பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு கடந்த செவ் வாய்க்கிழமை இரவு காரில் வந்த 6 பேர் பெட்ரோல் நிரப்பிய பிறகு பணம் கொடுக்காமல் புறப்பட்டனர். பெட்ரோல் நிலைய ஊழியர்கள் தடுத்தபோது அவர்களைத் தாக்கியதுடன் அங்கிருந்த கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். பெட்ரோல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா வில் பதிவான காட்சிகளின் மூலம், தப்பிச் சென்ற ரவுடிகள் பயன்படுத்திய காரை அடையா ளம் கண்ட போலிசார், அதைப் பிடிப்பதற்கான நடவடிக்கை

களை மேற்கொண்டனர். இந்நிலையில் புதன்கிழமை காலை 6.30 மணிக்கு காயாங் குளம் பகுதியில் அந்தக் கார் நின்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலிசார் இரு வர் இருசக்கர வாகனத்தில் அங்கு சென்றனர். அவர்களைக் கண்ட ரவுடிகள் போலிசாரைத் தாக்கினர். இதில் காவலர் ஒருவர் படுகாயமடைந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!