முன்னாள் சபாநாயகர் சிவகுமார் கொலை தொடர்பில் நால்வர் நீதிமன்றத்தில் சரண்

புதுச்சேரி: புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவகுமார் கொலை தொடர்பில் திருச்சியைச் சேர்ந்த பிரபு, பிரகாஷ், கார்த்தி, சண்முகம் ஆகியோர் நேற்று புதுவை நீதிமன்றத்தில் சரண் அடைய வந்தனர். ஆனால் இவர் களது சரண் ஏற்றுக்கொள்ளப் பட்டதா என்பது தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவகுமார் தனது சொந்த ஊரான காரைக்கால் நிரவியில் கடந்த 3ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கொலையில் தொடர்புடைய குணசேகரன், தமிழரசன் ஆகி யோர் கரூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். ஆனால், வேறு மாநிலக் கொலையில் சம்பந்தப் பட்டவர்கள் இங்கு முன்னிலை யாகக் கூடாது எனக் கூறி நீதிபதி அவர்களுடைய சரணை ஏற்க வில்லை. இதனால் இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று புதுவை நீதிமன்றத்தில் சரண் அடைய வந்த நால்வரையும் விழுப்புரத் தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் புதுவை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, மாவட்ட நீதிபதி தயாளன் முன் முன்னிலைப் படுத்துவதற்கு முயற்சி செய்தார்.

முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவகுமார் கொலையில் தொடர்புடைய கொலையாளி களான திருச்சி பிரபு, பிரகாஷ், கார்த்தி, சண்முகம் ஆகியோர் புதுவை நீதிமன்றத்தில் சரணடைய வந்தனர். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!