கோவை: கோவையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி பொங்கல் செய்வதற்குத் தேவையான வெல்லத்தில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விஜய் தலைமையிலான அதிகாரிகள், கோவை ரங்கேகவுடர் வீதி, தாமஸ் வீதி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டபோது 1,620 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வெல்லங்களில் வண்ணம் வருவதற்காக 'சோடியம் ஹைட்ரோ சல்பைடு' என்ற வேதிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது என்றனர்
1,620 கி. கலப்பட வெல்லம் பறிமுதல்
1 mins read

