குண்டுப் பெண்ணுக்குச் சிகிச்சை: ரூ.2 கோடியில் ஒற்றைப் படுக்கை மருத்துவமனை

மும்பை: எகிப்தைச் சேர்ந்த இமான் அகமது எனும் 500 கிலோகிராம் எடையுள்ள பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மும்பையில் உள்ள சைஃபீ மருத்துவமனை இரண்டு கோடி ரூபாயில் ஒற்றைப் படுக்கை மருத்துவமனைப் பிரிவைக் கட்டி வருகிறது. அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவைசிகிச்சை அறை, மருத்து வர்கள் மற்றும் தாதியர் அறைகள், ஓய்வு அறைகள், காணொளிக் கருத்தரங்கு அறை உள்ளிட்ட வசதிகள் 3,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகின்றன.

இமான் அகமதுவைக் கருத்தில் கொண்டு கட்டப்படும் இந்த மருத்துவமனையில் உடற்பருமன் தொடர்பான சிகிச்சை அளிக்கும் மருத்துவர் முஃபாஸல் லக்டாவாலாவுடன் நிபுணர் குழு ஒன்று இமானுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளது. அறுவைசிகிச்சை, அதனைத் தொடர்ந்த பிற சிகிச்சை ஆகியவற்றை இமானுக்கு இலவசமாகச் செய்ய மருத்துவ மனை முன்வந்தாலும் அவரை எகிப்திலிருந்து மும்பைக்குக் கொண்டு செல்ல விமான நிறுவனங்கள் எதுவும் முன்வர வில்லை. அவரைக் கொண்டு செல்ல விமானத்தின் இருக் கையை மாற்றி வடிவமைக்க வேண்டியதிருக்கும்.

36 வயதான இமான் கடந்த 25 ஆண்டுகளாக வீட்டைவிட்டு வெளியேறவில்லை. தொடக்கப் பள்ளியில் பயின்றுகொண் டிருந்தபோது இமான் மூளையில் பக்கவாதம் ஏற்பட்டதால அவர் படுத்தபடுக்கையானார். இமானுக்குச் சிகிச்சை வேண்டி மருத்துவரைத் தொடர்புகொண்ட அவரது சகோதரி தற்போது இமானின் தேவைகளைக் கவனித்து வருகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!