மெரினாவில் மனிதச்சங்கிலி போராட்டம்

மெரினாவில் மனிதச்சங்கிலி போராட்டம்

1 mins read
9b03a7ef-5c60-4f1e-a2f7-1086aad96a74
-

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றக் கோரியும் விவசாயிகளின் நலன்களைக் காக்க வலியுறுத்தியும் நேற்று சென்னை மெரீனா கடற்கரையில் இளையர்கள் நேற்று மனிதச்சங்கிலி அமைக்கும் போராட்டத்தை நடத்தினர். இதற்காக சமூக வலைத்தளங்கள் மூலம் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, நூற்றுக்கணக் கானோர் கடற்கரையில் திரண்டு போராட்டத்தில் பங்கேற்றனர். மெரீனா கடற்கரையின் கலங்கரைவிளக்கத்தில் இருந்து ஏறத்தாழ 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு இளைஞர்கள் மனிதச்சங்கிலி அமைத்தனர். இதையடுத்து பொதுமக்களும் இதில் இணைந்து கொண்டனர். கடந்த சில நாட்களாகவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் இளையர்கள் ஒருங்கிணைந்து போராட்டங்களை நடத்தத் துவங்கியுள்ளனர். படம்: தகவல் சாதனம்