தமிழர் வாழ்வில் இனிமை நிலவ முதல்வர் விருப்பம்

சென்னை: காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா வகுத்த வேளாண் திட்டங்களை தமிழக அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருவதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தமிழர்கள் வாழ்வில் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்க வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார். "உழவர் மகிழும் பெருநாளாம் பொங்கல் திருநாளில், உண்டி கொடுத்து, உயிர் கொடுக்கும் உலகின் உன்னதத் தொழிலான உழவுத் தொழிலை மேம்படுத்திட வும், விவசாய பெருமக்களின் வாழ்வு சிறக்கவும், காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின ருக்கு வாழ்நாள் முழுவதும் உறு துணையாக இருக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல் படுத்தினார்.

"எனவேதான் உணவு தானிய உற்பத்தியில் புதிய புதிய சாதனை களை தமிழகம் படைத்துள்ளது," என்று முதல்வர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். தமது வாழ்த்துச் செய்தியில் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத் தில் செயல்படுத்தப்பட்ட திட்டங் களை அவர் பட்டியலிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!