600 சிறுமிகளிடம் பாலியல் வன்முறை

புதுடெல்லி: சுனில் ரஸ்டோகி என்ற 38 வயது துணி தைக்கும் ஆடவர் ஒருவர் கிட்டத்தட்ட 600 பள்ளி மாணவிகளிடம் இனிக்கப் பேசி அவர்களை ஏமாற்றி, மானபங்கப்படுத்தியதன் காரணமாக சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். "கிழக்கு டெல்லியின் அசோக் நகர் பகுதியில் வசிக்கும் மாணவிகள் அதிக அளவில் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். சிறுமிகளின் பெற்றோர் சில பொருட்களைத் தங்கள் மகள்களிடம் கொடுத்தனுப்பச் சொல்லியதாகக் கூறி அவர்களைத் தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று சுனில் ரஸ்டோகி மானபங்கப் படுத்தி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது," என்று போலிஸ் அதிகாரி ஓம்வீர் சிங் நேற்று தெரிவித்தார்.

சிறுமிகள் சுனில் ரஸ்டோகியிடம் தங்களை விட்டுவிடும்படி உதவி கேட்டு கெஞ்சி அழுததாக வும் கூறப்படுகிறது. எப்பொழுது எல்லாம் பதின்ம வயது சிறுமிகள் பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பிச் செல்கிறார்களோ அப்போது எல் லாம் ரஸ்டோகி சிறுமிகளைத் தவறான முறையில் அணுகி மானபங்கப்படுத்தி உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!