புதுடெல்லி: ஏடிஎம் மையங்களில் எடுக்கும் பணத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.4,500ல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அத்துடன் சேமிப்புக் கணக்குதாரர்களுக்கான இந்த உச்சவரம்பு மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல் நடப்புக் கணக்கிலிருந்து வாரத்துக்கு எடுக்கப்படும் பணத்தின் உச்சவரம்பு ரூ.50,000த்தில் இருந்து ரூ.1 லட்சம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஏடிஎம்களில் தினமும் ரூ.10,000 எடுக்கலாம்
1 mins read

