தடையை மீறி நடந்தது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரை: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள், அதில் பங்கேற்ற வர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதால் அலங்காநல்லூரில் பெரும் பரபரப்பு நிலவியது. இதைய டுத்து ஏராளமான இளையர்களும் மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்ற தடை காரண மாக தமிழகத்தில் மூன்று ஆண்டு களாக ஜல்லிக்கட்டு நடைபெற வில்லை. இதனால் கடும் ஆவேசமடைந்த மதுரை மாவட்ட அலங்காநல்லூர் பகுதி மக்கள் நேற்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினர். அங்குள்ள திடலில் நேற்று காலை ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அவர்களில் பெரும் பாலானோர் இளையர்களாக இருந் தனர். இதையடுத்து திடலுக்குள் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

அவற்றைப் பிடிக்க மாடுபிடி வீரர்கள் முயற்சி செய்ய அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஜல்லிக்கட்டை காண வந்தவர்கள் குரல் கொடுத்தனர். அதே சமயம் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதிக்கு கோவில் மாடுகள் உட்பட எதனை யும் காவல்துறை அனுமதிக்க வில்லை. வாடிவாசலை நோக்கி ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது. அவர்களைப் பாதி வழியில் போலிசார் தடுத்து நிறுத்தியதுடன் தடியடியும் நடத்தினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!