'50 மலையாளிகளுக்கு ஆப்கானிஸ்தான் ஐஎஸ்ஐஎஸ் முகாமில் பயிற்சி

'50 மலையாளிகளுக்கு ஆப்கானிஸ்தான் ஐஎஸ்ஐஎஸ் முகாமில் பயிற்சி

1 mins read

திருவனந்தபுரம்: கேரள மாநிலத் தில் இருந்து காணாமல் போன 50 பேருக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் முகாமில் பயங்கரவாதிகளுக்கான பயற்சிகள் அளிக்கப்படுவதாக தேசிய பாதுகாப்புப் படையின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 1,000 முதல் 3,000 பேர் வரை நங்கர்ஹார் என்ற இடத்தில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் முகாமில் பயிற்சி பெற்று வருகின் றனர்.

சஜீர் அப்துல்லா, 35, என்ற சந்தேகப் பேர்வழிதான் கேரளா வில் உள்ளவர்களை ஐஎஸ்ஐஎஸ் முகாமில் பயிற்சி பெற தேர்ந் தெடுத்த முக்கிய நபர் என்று தேசிய பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், திருவனந்த புரம், காசர்கோடு, பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50 பேர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீர் என்று மாயமானார்கள். இவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர்.