இந்தியா: 58% சொத்துகளை வைத்துள்ள 1% செல்வந்தர்கள்

இந்திய மக்கள்தொகையில் பெரும் பணக்காரர்களாக உள்ள ஒரு விழுக்காட்டினரிடமே நாட்டின் மொத்த சொத்துகளில் 58 விழுக்காடு குவிந்திருக்கிறது என்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. உலகில் வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள அறப் பணி அமைப்புகளின் அனைத் துலகக் கூட்டமைப்பான 'ஆக்ஸ் ஃபம்' வெளியிட்டுள்ள அறிக் கையில், இந்திய மக்களில் கடைசி 70 விழுக்காட்டினரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்புக்கு நிகரான சொத்துகளை, அதாவது 216 பில்லியன் அமெரிக்க டாலர் (கிட்டத்தட்ட 14.7 லட்சம் கோடி ரூபாய்) மதிப்புடைய சொத்துகளை 57 பெருஞ்செல்வந்தர்கள் வைத் துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 'பில்லியனர்'கள் எனப்படும் பெரும் பணக்காரர்கள் 87 பேர் இந்தியாவில் இருக்கின்றனர் என்றும் அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 248 பி. அமெரிக்க டாலர், அதாவது 17 லட்சம் கோடி ரூபாய் என்றும் ஆக்ஸ்ஃபம் அறிக்கை தெரிவித்தது.

இந்தியச் செல்வந்தர்களில் முதலிடத்தில் இருப்பது ரிலை யன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி. அவரது சொத்து மதிப்பு 19.3 பி. அமெரிக்க டாலர். சன் ஃபார்மசூட்டிகல்ஸ் நிறு வனத்தின் திலிப் சங்வி (US$16.7 பி.), விப்ரோ குழுமத்தின் அஸிம் பிரேம்ஜி (US$15 பி.) ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் நிலைகளில் உள்ளனர். இந்தியாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 3.1 டிரில்லியன் அமெரிக்க டாலர். உலக அளவில் பார்க்கையில், உலக மக்கள்தொகையில் 50% ஏழைகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பும் முதல் எட்டுப் பணக்காரர்களின் சொத்து மதிப்பும் ஒன்றுதான். இவ்வாண்டு நிலவரப்படி உலகின் மொத்த சொத்து மதிப்பு 255.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்றும் அதில் 6.5 டிரில்லியன் டாலர் 'பில்லியனர்' களிடம் உள்ளது என்றும் கூறப் படுகிறது.

பில் கேட்ஸ் ((US$75 பி.), அமன்சியோ ஒர்ட்டேகா (US$67 பி.), வாரன் பஃபெட் (US$60.8 பி.) ஆகியோர் உலகின் முதல் மூன்று பெரும் பணக்காரர்கள். '99 விழுக்காட்டினருக்கான பொருளியல்' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டிருக்கும் ஆக்ஸ்ஃபம், ஒரு சிலருக்கு மட்டும் பயன்படும் வகையில் இல்லாமல் எல்லாருக்கும் பலன் அளிக்கக்கூடிய மனிதப் பொரு ளியலை உருவாக்கவேண்டிய தருணமிது என்று வலியுறுத்தி இருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!