சசிகலா: அதிமுகவை மேலும் உறுதியாய்க் கட்டமைப்போம்

அதிமுகவை மேலும் உறுதியாய்க் கட்டமைக்க எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் உறுதி ஏற்போம் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா (படம்) அதிமுக வினரைக் கேட்டுக் கொண்டுள் ளார். "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அரசியல் எதிரிகள் பயன்படுத்திக் கொள்ள எக்காரணம் கொண்டும் நாம் அனுமதித்து விடக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். "அதிமுகவில் உள்ளதைப் போல ராணுவக் கட்டுப்பாடு வேறு எந்த ஓர் அரசியல் இயக்கத்திலும் இல்லை என்று தெரிவித்துள்ள வி.கே. சசிகலா, தலைமை மீது மாறாப் பற்றும், தீராத விசுவாசமும் கொண்ட கோடிக்கணக்கான தொண்டர்கள் வேறு எந்த இயக்கத்திற்கும் கிடைக்காத பேறு என குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா இருந்திருந்தால், எவ்வாறு உணர்வோமோ, அந்த உணர் வோடு அதிமுகவில் தாயின் பரிவை, பாதுகாப்பைத் தொடர்ந்து இனியும் உணரலாம் என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். வீழ்ந்தே கிடக்கும் எதிரிகள், அதிமுக எனும் எஃகுக் கோட்டை யில் விரிசல் விடாதா? என்று எண்ணிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், முன்பைவிட உறுதி யாய், அதிமுகவை கட்டமைக்க சூளுரை ஏற்போம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!