'151 உயிர்களை பலிவாங்கிய ரயில் விபத்துகள் பாகிஸ்தான் உளவுப்படையின் நாசவேலை'

'151 உயிர்களை பலிவாங்கிய ரயில் விபத்துகள் பாகிஸ்தான் உளவுப்படையின் நாசவேலை'

1 mins read

கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இரு பெரும் ரயில் விபத்துகளுக்கு பாகிஸ்தா னின் உளவுப் படையான ஐஎஸ்ஐ காரணம் என்று போலிசார் சந்தே கிக்கின்றனர். கான்பூர் அருகே நடந்த அந்த விபத்துகளில் 151 உயிர்கள் பறிபோனதோடு கிட்டத்தட்ட 200 பேர் வரை காயமடைந்தனர். அச்சம்பவங்கள் தொடர்பில் இந்திய=நேப்பாள எல்லையில் உள்ள மோதிஹரி என்னும் இடத்தில் மூவர் பிடிபட்டனர். உமாசங்கர் பட்டேல், மோதிலால் பாஸ்வான், முகேஷ் யாதவ் என்னும் அம்மூ வரும் துபாயை இருப்பிடமாகக் கொண்ட நேப்பாள குடிமகனின் உத்தரவுக்கு இணங்க ரயில்களைக் கவிழ்த்து நாசவேலையில் ஈடுபட்டனராம். அந்த நேப்பாள குடிமகன் பாகிஸ்தான் உளவாளி என்பதும் இப்போது தெரிய வந்துள்ளதாக போலிஸ் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி கோராசாஹான் என்னுமிடத்தில் உள்ள ரயில் தண்ட வாளத்தில் குக்கர் வெடிகுண்டு வைக்கப்பட்டதன் தொடர்பில் இந்த மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதாக கான்பூர் மாவட்ட போலிஸ் துணை தலைமை அதிகாரி ஜிதேந்தர் ராவ் கூறினார். இவர்களில் ஒருவன் இந்தூர் - பாட்னா விரைவு ரயிலையும் அஜ்மீர்- சீல்டா விரைவு ரயிலையும் கவிழ்க்கச் சதி செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரி வித்தார்.