100 ரூபாய் வாங்கிக்கொண்டு ‘மை’ வைக்கும் விஜயகாந்த் மீது தொண்டர்கள் அதிருப்தி

கட்சிக்கு நிதி நேர்க்கும் முயற்சியாக தொண்டர்களிடம் 100 ரூபாய் வசூலிக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது அதி ருப்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. இருபதுக்கு மேற்பட்ட எம்எல் ஏக்களுடன் தமிழ்நாட்டின் எதிர்க் கட்சித் தலைவராக வலம் வந்து கொண்டிருந்த விஜயகாந்துக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் பூஜ்யம்தான் மிஞ்சியது. படுதோல்வி அடைந்ததால் சோர்ந்துபோய்விட்ட தேமுதிக தொண்டர்களைத் தட்டி எழுப்பும் ஒரு முயற்சியாக உங்களுடன் நான் என்னும் சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறார் விஜயகாந்த்.

ஏற்கெனவே முதற்கட்ட பயணத்தை முடித்துவிட்ட அவர் நாளை கன்னியாகுமரியிலும் நாளை மறுதினம் தூத்துக்குடி யிலும் கட்சித் தொண்டர்களை சந்திக்கிறார். அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை என தென்மாவட்டங்களில் தொண்டர் களை குடும்பத்துடன் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே, அண்மையில் நடைபெற்ற உங்களுடன் நான் நிகழ்ச்சியில் பங்கேற்ற தொண்டர்கள் தம்முடன் நின்று படம் எடுத்துக்கொள்ள நூறு ரூபாய் கட்டணம் விதித்தாராம் விஜயகாந்த். ஒருமுறை படம் எடுத்தவர் மீண்டும் வந்துவிடாமல் இருக்க, நூறு ரூபாய் கொடுத்தவரின் விரலில் 'மை' வைக்கப்பட்டதாம். இதுபோன்ற செயல்களால் தேமுதிக தொண்டர்கள் அதி ருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!