கடலில் கண்டெடுக்கப்பட்ட 3 அடி உயர ஐம்பொன் புத்தர் சிலையால் பரபரப்பு

பொன்னேரி: ஐம்பொன் புத்தர் சிலை ஒன்று கடலில் கண்டெடுக் கப்பட்டதால் பழவேற்காடு பகுதியில் பரபரப்பு நிலவியது. நேற்று முன்தினம் 'காணும் பொங்கல்' என்பதால் பழவேற்காடு கடற்பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். மீஞ்சூரைச் சேர்ந்த சங்கர் என்பவரும் தமது உறவினர்களுடன் வந்து கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் காலில் மர்மப் பொருள் ஒரு இடறியது. அதை எடுத்துப் பார்த்தபோது ஐம்பொன்னால் செய்யப்பட்ட புத்தர் சிலை என்பது தெரிய வந்தது. சிலையைக் கண்டதும் அங்கே குளித்துக் கொண்டிருந்த மற்றவர்களும் அதை ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். இதையடுத்து அச்சிலையை அந்தப் பகுதியில் காவல் நிலையத்தில் சங்கர் ஒப்படைத்தார். தொல்பொருள் ஆய்வுக்குப் பிறகு அந்தச் சிலை எப்போது செய்யப் பட்டது, அதன் மதிப்பு என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும் என அரசு வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!