3000 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்

சென்னை: அடுத்த மாதம் முதல் சென்னையில் 3,000 லாரிகள் மூலம் தெருத்தெருவாக குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக 273 தனியார் விவசாய கிணறுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரி, குளம், அணைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இன்னும் ஒரு மாதத்துக்குத் தேவையான தண்ணீரே உள்ளது. எனவே தனியார் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னையில் விநியோகிக்கப்படவுள்ளது. கோடை காலம் ஆரம்பமாக உள்ளதால் பழுதடைந்த ஆழ்துளை குழாய் கிணறுகளை ஆழப்படுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!