ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தலையிட உயர் நீதிமன்றம் மறுப்பு

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தலையிட உயர் நீதிமன்றம் மறுப்பு

1 mins read

சென்னை: சென்னையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் தற்போது தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறிவிட்டது. இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்றுத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வின் கவனத்திற்கு வழக்கறிஞர் பாலு கொண்டு வந்தார். அதையடுத்து, "இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தற்போது தலையிட விரும்ப வில்லை," என்று அமர்வு குறிப்பிட்டது.