அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு

அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு

1 mins read

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிக்க வரும் அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு காணப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் போராட்டக்காரர் களைச் சந்திக்க முயற்சி செய்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திருப்பி அனுப்பப்பட்டார். இதே போல திருச்சியில் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்திக்க வந்த திமுக மூத்த தலைவர் கே.என்.நேருவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அலங்காநல்லூரில் போராட்டக்காரர்களைச் சந்திக்க வந்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் திருப்பி அனுப்பப்பட்டார். கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த திமுகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான சுகவனம் தண்ணீர் பொட்டலம் வீசி விரட்டி அடிக்கப்பட்டார். மதுரையில் தமுக்கம் மைதானத்தில் போராட்டக்காரர்களைச் சந்திக்க வந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் திருப்பி அனுப்பப்பட்டார்.