வெளிநாட்டுத் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு

தமிழர்களின் பாரம்பரிய விளை யாட்டான ஜல்லிக்கட்டுக்குத் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங் களும் போராட்டங்களும் வலுத்து வரும் வேளையில் உலகம் முழு வதும் வசிக்கும் தமிழர்களும் பல் வேறு வழிகளில் தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தி வரு கின்றனர். துபாய் முதல் அமெரிக்கா வரை ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாகக் குரல் எழுந்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஹாங்காங், துபாய், இங்கிலாந்து, மெக்சிகோ, அயர்லாந்து, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உட்பட பல நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

'பீட்டா' என்ற அமைப்பு வழக்குத் தொடுத்ததால் ஜல்லிக் கட்டுக்கு இந்திய நீதிமன்றம் தடை விதித்தது. அதன் பிறகு தமிழக அரசும் மத்திய அரசும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முயற்சிகள் தீவிரமாக்கப்படும் என்று அறி வித்தன. ஆனால் அதற்கான அறிகுறி இன்று வரை தென்பட வில்லை என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் பொருமுகின்றனர். தமிழகத்தில் சில இடங்களில் நடைபெற்ற போராட்டம் இப்போது மாநிலம் முழுவதும் பற்றி எரிகிறது. இந்த நிலையில் வெளிநாட்டுத் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள சிகா கோ நகரிலும் தமிழர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம் என்று முழங்கினர்.

அமெரிக்காவில் உள்ள ரிச் மாண்ட் என்ற இடத்தில் மலைச் சாமி என்பவர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பதாகை களைத் தாங்கி ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தினர். இது குறித்து மலைச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட் டிருந்தார். அதில் "வெர்ஜினியா மாகா ணத்தின் ரிச்மாண்டில் வாழும் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கூறி ஜல்லிக் கட்டிற்குத் தங்கள் ஆதரவைப் பதிவு செய்துள்ளனர்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிலும் ஜல்லிக் கட்டு நடத்த வேண்டும் என்ற குரல் ஒலித்தது. ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் முன்பாக நடைபெற்ற அரை மணி நேர மெளனப் போராட்டத்தில் ஏராளமான தமிழர்கள் பங்கேற்றனர்.

அதன் பின்னர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் 'ஜல்லிக்கட்டு தமிழர்கள் உரிமை' என்று முழக்கங்களை எழுப்பினர். துபாயிலும் 'அல் கர்மா' என்ற அமைப்பின் தமிழர்கள் 'நாங்கள் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம்' என்ற பதாகைகளை ஏந்தி குரல் கொடுத்தனர். சிங்கப்பூரிலும் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்துக்கு வெளியே பலர் பதாகைகளை ஏந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரி வித்தனர் என்று ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. எல்லா இடங்களிலும் பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியா, மெல்பர்ன் நகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்ட தமிழர்கள். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!