மொகாலி: பாரதிய ஜனதாவை தோற்கடிக்க தனது கட்சி போட்டி யிடாத மாநி லங் களிலும் பிரசாரம் செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள் ளார். 5 மாநிலங்க ளின் சட்டப்பேரவைத் தேர்த லில் பஞ்சாப் மற்றும் கோவாவில் மட்டும் இவரது ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் வட்டார கட்சிகள் தங்கள் மாநிலங் களில் மட்டும் தீவிரமாகப் போட்டி யிடும். மற்ற மாநிலங்களில் ஒரு சில தொகுதிகளில் பெயருக் குப் போட்டியிடுவது வழக்கமாக உள் ளது. வட்டாரக் கட்சிகளின் தலை வர்கள் தாங்கள் போட்டியிடாத இடங்களில் பிரசாரம் செய்வ தில்லை.
இதற்கு மாறாக ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடு உள்ளது. டெல்லியின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பஞ்சாப் மற்றும் கோவா தேர்தல்களில் முழுமூச்சு டன் போட்டியிடுகிறது. ஆனால் உ.பி., உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அக்கட்சி ஓரிடத்தில்கூடப் போட்டியிட வில்லை. எனினும் பிப்ரவரி 4ல் பஞ்சாப் மற்றும் கோவா தேர்தல் முடிந்தபின் மற்ற மூன்று மாநிலங் களிலும் கெஜ்ரிவால் தீவிரப் பிரசாரம் செய்ய உள்ளார். மேலும் தனது கட்சியின் மற்ற தலைவர்களையும் இங்கு பிர சாரம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாநிலங்களில் பாஜகவை தோற்கடிப்பதே கெஜ்ரிவாலின் முக்கிய நோக்கமாக உள்ளது. மணிப்பூரில் மட்டும் இரோம் ஷர்மி ளாவை ஆதரித்துப் பிரசாரம் செய்யவிருக்கும் கெஜ்ரிவால், உ.பி., உத்தரகாண்டில் எவரையும் ஆதரிக்கமாட்டார் எனத் தெரிய வந்துள்ளது.
மொகாலியில் உள்ள கரர் தொகுதியில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு திரும்புகையில் ஆம் ஆத்மி ஆதரவாளர் ஒருவர், அங்கிருந்த காவலர்களையும் மீறி வாகனத்தில் அமர்ந்திருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ரகசியமாக ஏதோ சொல்கிறார். அதை ஆவலுடன் செவிமடுக்கிறார் கெஜ்ரிவால். படம்: அகிலேஷ் குமார்