பள்ளிப் பேருந்து-லாரி மோதல்; 18 குழந்தைகள் உட்பட 25 பேர் பலி

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஏட்டா மாவட்டத்தில் பள்ளிப் பிள்ளைகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது சரக்கு லாரி மோதியதில் 18 குழந்தைகள் உட்பட குறைந்தது 25 பேர் மரணமடைந்தனர். மேலும் 50 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த குழந்தைகள் ஐந்து முதல் பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் அலிகஞ்சில் இருக்கும் 'ஜே எஸ் பப்ளிக் ஸ்கூல்' என்ற பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

விபத்தில் பேருந்து ஓட்டுநரும் மாண்டு விட்டதாகக் கூறப்படுகிறது. நேற்றுக் காலை அவர்கள் பள்ளிக்குச் விபத்துக்குள்ளான பேருந்து. படம்: இந்திய ஊடகம் சென்றபோது இவ்விபத்து நிகழ்ந்தது. காயமடைந்த 50 பேரில் 36 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண் ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. மோதிய வேகத்தில் சாலையோரமாக இருந்த பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய அந்தப் பேருந்தில் இருந்து உடல்களையும் காயமடைந்தோரையும் மீட்க ஒரு மணி நேரத்திற்கும் மேலானதாகப் பார்த்தவர் கள் கூறினர்.

கடுங்குளிர் காரணமாக ஏட்டா மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி களுக்கும் மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தும் அதை மீறி அந்தப் பள்ளி செயல்பட்டதாகக் கூறப் பட்டது. விபத்து குறித்து அறிந்ததும் மாவட்ட நீதிபதி, காவல்துறைக் கண்காணிப்பாளர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!