20 ஆண்டுகளுக்குப் பின் தந்தையைப் பார்த்த மகிழ்ச்சியில் மகன் மாரடைப்பால் மரணம்

சிறையிலிருந்து விடுதலையான தந்தையைப் பார்த்த மகிழ்ச்சியில் இளையர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந் தது. மும்பையைச் சேர்ந்தவர் சஜித் மக்வானா, 24. இவர் அந்தேரி பகுதியில் வாகனப் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். சஜித்தின் தந்தையான ஹசன், 65, 1977ஆம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கி கைதானார். அந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தமக்கு விதிக்கப்பட்ட தண்ட னையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த ஹசன், 1981ஆம் ஆண்டு பிணை யில் வெளிவந்தார்.

ஆயினும், 1996ஆம் ஆண்டு அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய, அவர் புனேயில் இருக்கும் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். அப் போது அவருடைய மகன் சஜித் துக்கு நான்கு வயதுகூட பூர்த்தி யாகவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு ஹசன் கோலாப்பூரில் உள்ள கலம்பா சிறைச்சாலைக்கு மாற்றப் பட்டார். இந்த நிலையில், சென்ற 17ஆம் தேதி அவரை விடுதலை செய்யும்படி மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. தந்தையின் விடுதலைக்குப் பின்னரே திருமணம் செய்துகொள் வது என்பதில் உறுதியாக இருந்த சஜித்துக்கு இந்தச் செய்தி பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ஆயினும், தந்தையைக் கண்ட மகிழ்ச்சியில் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்பட்டது அவரது உயிருக்கு எமனாய் அமைந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!