அமைச்சர் உதயகுமார்: சசிகலா எங்கு போட்டியிட்டாலும் தொண்டர்கள் வரவேற்பர்

மதுரை: அதிமுக பொதுச்செயலர் சசிகலா நடராஜன் போட்டியிடு வதற்காக, திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகத் தயார் என அமைச்சர் உதயகுமார் மீண்டும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதுபோல் அதிமுக அரசு முடங்கிவிடவில்லை என்றும் மதுரையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத் தில் அவர் பேசினார். காலஞ்சென்ற முதல்வர் ஜெய லலிதாவின் தீவிர விசுவாசியாக அடையாளம் காணப்பட்டவர் உதயகுமார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என உரக்கக் குரல் கொடுத்தவர்களில் இவரும் முக்கியமானவர்.

தொடக்கம் முதலே தமிழக முதல்வர் பதவியையும் சசிகலா ஏற்க வேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்தி வருகிறார் அமைச்சர் உதயகுமார். அவர் தேர்தலில் போட்டியிடுவ தற்காக, தாம் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள திருமங்கலம் தொகுதியை சசிகலாவுக்கு விட்டுத் தர தயார் எனவும் உதய குமார் ஏற்கெனவே கூறியிருந்தார். இந்நிலையில், மதுரை பொதுக் கூட்டத்திலும் இதே கருத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

"எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை, இந்த ஆண்டு முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என பொதுச்செயலர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். அதிமுக என் பது மற்ற கட்சிகளைப் போல் பத்திரிகைகளை நம்பி வளர்ந்த இயக்கம் இல்லை; சுயம்புவாக வளர்ந்த இயக்கம். "சசிகலா எங்கு போட்டியிட் டாலும் அவரை வரவேற்க தொண்டர்கள் தயாராக உள்ளனர். திருமங்கலம் தொகுதியில் சசிகலா போட்டியிட முடிவு செய் தால் அவருக்காக எனது எம்எல்ஏ., பதவியை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன்," என்றார் உதயகுமார். அதிமுக ஆட்சி முடங்கி விட்டதாக எழும் விமர்சனங்கள் தவறானவை என்று குறிப்பிட்ட அவர், அதிமுக அரசு சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறினார். எனினும் முதல்வர் ஓபிஎஸ் தரப்பு இவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தகவல்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!