அஞ்சலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆற்காடு: அஞ்சலகம் ஒன்றுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட் டல் காரணமாக ஆற்காட்டில் பெரும் பதற்றம் நிலவியது. இது தொடர்பாக போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்காடு பகுதிக்கான தலைமை அஞ்சலகத்துக்கு புதன்கிழமை மாலை சுமார் 5 மணி அளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. தபால் நிலைய அலுவலர் அன்பழகன் என்பவர், அந்த அழைப்பை எதிர் கொண்டார்.

எதிர்முனையில் பேசியவர், தமிழும் இந்தியும் கலந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். தபால் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்று கூறி மர்ம நபர் தொலைபேசி அழைப்பைத் துண்டிக்கவே, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, மோப்ப நாயுடன் விரைந்து வந்த காவல் துறையினர் தபால் நிலையம் முழு வதும் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். பல மணி நேரம் நீடித்த சோதனையின் போது வெடி குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!