சென்னை: வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, மயிலாப்பூர் பகுதியில் உள்ள அந்த வங்கி பொங்கல் விடுமுறைக்காக நான்கு நாட்கள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் வங்கி கட்டடத்தின் பின்புற சன்னலை உடைத்து உள்ளே நுழைந்து பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்துள்ளனர். வங்கியில் இருந்த 55 பாதுகாப்பு பெட்டகங்களில் மூன்றை மட்டுமே கொள்ளையர்கள் உடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
வங்கி பாதுகாப்புப் பெட்டகம் உடைப்பு: 200 பவுன் கொள்ளை
1 mins read

