அணைகளில் நீர்மட்டம் சரிவு: வால்பாறை விவசாயிகள் கவலை

வால்பாறை: முக்கிய அணைகளில் நீர்மட்டம் சரிவு கண்டுள்ளதால் வால்பாறை பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இப்பகுதியில் நிலவும் கடும் பனி, கடும் வெயில் காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து வருகிறது. கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறுகளில் நீர் வரத்து ஓடைபோல காட்சியளிக்கிறது. எனவே, பரம்பிக்குளம்-ஆழியார் பாசனத் திட்டத்தின் முக்கிய அணையான சோலையார் அணை நீர்மட்டம் குறைந்துவிட்டது.

தற்போதைய நிலையில், சோலையார் அணைக்கு வினாடிக்கு 66 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து 197 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 160 அடி நீர்மட்டம் உள்ள அணையில் 3.3 அடி நீரே உள்ளது. பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 72 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து 260 கன அடி நீர் வெளியேறுகிறது. முக்கிய அணைகளின் நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ள நிலையில், பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!