கத்திக்குத்து: மகன் என்றும் பாராது கைது செய்ய உதவிய காவல் அதிகாரி

புதுடெல்லி: காதலிக்க மறுத்த 23 வயது பாலர் பள்ளி ஆசிரியை ஒருவர் ஒன்பது முறை கத்தியால் குத் தப் பட்ட சம்பவம் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. இரண்டு சந்தேகப் பேர்வழிகளை டெல்லி போலிசார் வலைவீசித் தேடி வந் தனர். இதில் தனது மகன் அமித்துக்- குத் தொடர்பிருப்பதை அறிந்த 52 வயது காவல்துறை துணை ஆய் வாளர் ராஜ் சிங், உடனடியாக அப்பகுதியிலுள்ள நஜாப்கார் காவல் நிலையத்திற்குச் சென்று உண்மையைக் கூறி, குற்றவாளி- யான தனது மகனைக் கைது செய்ய உதவுவதாகக் கூறினார். அத்துடன் "தனது மகன் செய்த தவற்றுக்கு அவன் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். அதனால் யாரும் அவனுக்கு எவ்வகையிலும் உதவக்கூடாது," என உறவினர்களை எச்சரித்தார். சம்பவம் நடந்தபோது அந்த அதிகாரி 7 நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்தார்.

நஜாப்கார் என்னுமிடத்தில் நடந்த இந்தக் கத்திக் குத்துச் சம்பவத்தில் தனது மகனுக்குத் தொடர்புள்ளது என்பதை அறிந்த அவர் உடனடியாக இந்தச் சம்பவத்தை விசாரித்து வரும் காவல் அதிகாரிகளைத் தொடர்புகொண் டார். குற்றவாளிகளைத் தேடிக் கொண் டிருந்த அந்த அதிகாரி- களுடன் இணைந்து தனது உற வினர்களின் வீடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். "காவல் அதிகாரி என்பவர், குற்றம் செய்தவன் தனது மகனாக இருந்தாலும் தேடிக்கண்டு பிடித்து சட்டத்தின்முன் நிறுத்த வேண் டும்," என்று கடமையுணர்- வுடன் கூறியுள்ளார். அவரது கடமை யுணர்வை டெல்லி காவல்துறை துணை ஆணையாளர் திபேந்திரா பதக் பாராட்டியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!