பீகார்: பீகார் மாநிலத்தில் மது- பானத் தயாரிப்புக்கு வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து உரிமம் வழங்- கப்பட மாட்டாது. முங்கேர் மாவட்- டத்தில் வெள்ளிக்கிழமை நடை- பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது அம்மாநிலத்- தின் முதல்வர் நிதிஷ்குமார் இதனை அறிவித்தார். "அடுத்த நிதியாண்டு முதல் பீகாரில் எந்தவொரு மதுபானத் தொழிற்சாலைக்கும் உரிமம் வழங்கப்பட மாட்டாது. தற்போது இயங்கி வரும் தொழிற்சாலைகள் 2017=18ஆம் நிதியாண்டில் உரிமத் தைப் புதுப்பிக்க முடியாது. ராஜ்கீரில் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூடியபோது இதுகுறித்து விரிவாக விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது. கலால் தீர்வைச் சட்டம், 2016ன் கீழ் இம்- முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது," என்றார் நிதிஷ்குமார்.
நிதிஷ்குமார்: பீகாரில் மதுபானத் தயாரிப்புக்கு உரிமம் கிடையாது
1 mins read

